இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலை தொடர்பாக ஆராய்வதற்கு சிறிலங்காவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்த போதும் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக நம்பியார் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது அங்கு பலத்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளில் ஒரு நாடு நம்பியாரின் இந்த நிலைப்பாட்டை நேரடியாக எதிர்த்திருந்தது.
அதன் பின்னர் நேற்று மீண்டும் நடைபெறவிருந்த அதிகாரபூர்வமற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நம்பியார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட நம்பியார் இந்தியாவுக்குச் சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியாதான் நம்பியாரின் செயற்பாடுகளின் பின்னனியில் செயற்படுவதாக நம்பப்படுகின்றது.
from (Proff)
http://www.puthinam.com/full.php?2b2QrXe0dZl2K0ecMJ7d3b4cdHJ4d3e4c3cc2CsT3d42aXT2b032Np3e
சிந்தனை சிற்பிகள்
புதன், 22 ஏப்ரல், 2009
ஆழ வேரோடி, விரிவாக்கமும் உறுதியும் பெறும் இந்திய - சிறிலங்கா இராணுவக் கூட்டு!
போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளரான சிம்ரன் சொட் (Simran Sodh), 'தி ஸ்ரேற்ஸ்மன்' ஏட்டுக்காக எழுதியுள்ள செய்திக்குறிப்பொன்றில் பல புதிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.அவர் அதில் முக்கியமாகக் குறிப்பிடுவதாவது:
"சிறிலங்கா இராணுவத்துக்கு கடந்த சில வருடங்களாக இந்தியா வழங்கிய உதவிகளைப் பொறுத்தவரையில் ஆயுதங்களை விற்பனை செய்வது என்பதற்கு மேலாக பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கைப் பேணிக்கொள்வதற்கான ஒன்றாகவே அது இருந்துள்ளது.
கடந்த சில வருட காலத்தில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகள் மிகவும் ஆழமாக வேரூன்றிச் சென்றுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
புதுடில்லிக்கு கடந்த வருடம் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியைப் (Defence Expo) பார்வையிட்டார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அவர் மிகவும் நுணுக்கமாகப் பார்வையிட்டார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் விஜே சிங், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி மார்ஷல் பாலி ஹோமி ஆகியோரையும் இந்த புதுடில்லிப் பயணத்தின் போது சரத் பொன்சேகா சந்தித்தார்.
இவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது எவ்வாறான கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது தெரியவரவில்லை. மிசோராமில் உள்ள இந்திய இராணுவத்தின் 'கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டு முறை' தொடா்பான கல்லூரியிலும் (Indian Army’s Counter Insurgency and Jungle Warfare School), கர்னாடகா பெல்கம் பகுதியில் உள்ள அதிரடிப்படைக் கல்லூரியிலும் இடம்பெற்ற சிறப்பு பாடநெறிகளுக்கு சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னதாக இந்திரா ரக கதுவீகள் இரண்டை சிறிலங்காவுக்கு இந்தியா விற்பனை செய்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கூட்டிணைந்த வகையிலான சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை கொழும்புடன் பரிமாறிக் கொள்ளும் செயற்பாடுகளையும் புதுடில்லி மேற்கொண்டது.
சிறிலங்காவுடனான ஆயுத வியாபாரங்களை புதுடில்லி எப்போதுமே வரவேற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா வழங்கிவரும் நேரடி இராணுவ உதவிகளுக்கு மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
இந்தியா உட்பட பல நட்பு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இந்த நிலையில் இராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதற்கு அந்த நாடுகள் முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளையில் சிறிலங்காவின் போர் நிலைப்பாட்டுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாகச் செயற்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு தாம் நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தொடர்ந்தும் வற்புறுத்திவந்த போதிலும், தேர்தல் சமயத்தில் கூட இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் யாப்பா, அதற்காக சிறிலங்கா இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், "தேர்தல் சமயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்குச் சென்று யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டனர் ஆனால், இந்திய அரசு அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்.
From
-----------
http://www.puthinam.com/full.php?2aXVrYe0dMlYM0ecQJ663b476Bn4d3h4l3cc2IvS3d424UQ2a02ZPp3e

புதன், 8 ஏப்ரல், 2009
தொடர்ந்து அதிகரிக்கிறது ஓட்டு போடாதவர்கள் எண்ணிக்கை : என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்?
லோக்சபா தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதத்தை விட ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் 40 சதவீதம் பேரது விருப்பத்துக்கு மாறாகவே பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, கோடை வெயிலில் வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட வேண்டுமா என்ற சோம்பல் தான் முக்கிய காரணங்கள்.
இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில், 1952ம் ஆண்டு தேர்தலில் 61.2 சதவீதமும், 1957ல் 62.2, 1962ல் 55, 1967ல் 61.3, 1971ல் 55.3, 1977ல் 60.5, 1980ல் 56.9, 1984ல் 64, 1989ல் 62, 1991ல் 61, 1996ம் ஆண்டு தேர்தலில் 57.94 சதவீதமும் ஓட்டுப் பதிவானது. தமிழகத்தில் 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டுப் பதிவானது; 1998ல் 56 சதவீதமாக குறைந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 60 கோடியே 23 லட்சம் பேர். அவற்றில் ஓட்டுப் போட்டவர் 37 கோடியே 37 லட்சம் பேர். 22 கோடியே 86 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லை.
மாநில அளவில் அதிகபட்சமாக திரிபுராவில் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மிகக் குறைந்த அளவாக காஷ்மீரில் 41 சதவீதம் ஓட்டுப் பதிவானது. நாட்டின் தலைநகரான டில்லியில் 51 சதவீதம் மக்கள் தான் ஓட்டுப் போட்டனர். இத்தேர்தலில் இந்தியாவில் 619 கட்சிகள் இருந்தன. ஆனால், 176 கட்சிகள் தான் தேர்தல் களத்தில் இறங்கின. அவற்றில் 138 கட்சிகளுக்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டே கிடைத்தது. 37 கட்சிகள் தான் வெற்றி பெற்றன. 138 கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்காளர் எண்ணிக்கையை கணக்கிட்டால் காங்கிரஸ் 16 சதவீதம், பா.ஜ., 15 சதவீதம், மார்க்சிஸ்ட் 3 சதவீதமும் ஓட்டு பெற்றன. அதேவேளை ஓட்டுப் போடாதவர்கள் 38 சதவீதம் பேர் இருந்தனர். அதாவது முதல் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பெற்ற ஓட்டை விட ஓட்டுப் போடாதவர்கள் தான் அதிகம்.
கடந்த 2004 தேர்தலின் போது தேசிய அளவில் மொத்த வாக்காளர்கள் 67 கோடி. ஆனால், 38 கோடியே 74 லட்சம் ஓட்டுகளே பதிவானது. இது 57.82 சதவீதமாகும். மீதமுள்ள 28 கோடி பேர் ஓட்டுப் போடாமல் இருந்து விட்டனர். இது 42.18 சதவீதமாகும். கேரளாவில் அதிகபட்சமாக 61 சதவீதம், தமிழகத்தில் 60.56 சதவீதம், தலைநகர் டில்லியில் 50 சதவீதம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 45, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகரில் 40 - 45, உத்தரகண்ட், உத்தரபிரதேசத்தில் 35, மிகக் குறைந்தபட்சமாக சிக்கிமில் 30 சதவீதம் ஓட்டுப் பதிவானது. வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதே இதற்கு காரணம் என கட்சிகள் குற்றம்சாட்டின.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26.69 சதவீதம், பா.ஜ., 22.16, மார்க்சிஸ்ட் 5.69, பகுஜன் 5.35, தேசியவாத காங்கிரஸ் 1.78, கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் பெற்ற ஓட்டு விகிதத்தை விட, ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த முறை மன்மோகன் பிரதமரானது 57 சதவீதம் பேர் அளித்த ஓட்டால் மட்டுமே. மற்றவர்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விட்டனர்.

திங்கள், 6 ஏப்ரல், 2009
செவ்வாய், 31 மார்ச், 2009
ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம்!
சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது."The first of April is the day we remember what we are the other 364 days of the year " - Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்."முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், " பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள். எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் 'பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஸ்காட்லாந்தில் April Fool's Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்", இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர். பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர். 1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.. ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.(ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்மை நம் அரசியல்வாதிகள் முட்டாள்களாக்கி வருவதால் பேசாமல் தேர்தல் நாளையே ஏப்ரல்-1ம் தேதிக்கு மாற்றிவிட்டால் என்ன?!)
From (proff)
---------
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0331-history-of-april-fools-day.html

திங்கள், 16 மார்ச், 2009
வெறும் 400 ரூபாயில் 'டயாலிசிஸ்'
மார்ச் 12,2009,00:00
50,00,00,000 பேர்கள்... உலக அளவில் சிறுநீரக குறைபாடு காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இது. ஹார்வர்டு பல்கலை நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, நம் நாட்டில் 100க்கு 13 பேர் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது, நமக்கு விடப்பட்டுள்ள, "ரெட் அலர்ட்'.
உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் தான் சிறுநீரக பாதிப்பின் திறவுகோல் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் "டயாலிசிஸ்' எனும் ரத்த சுத்திகரிப்பு முறை மூலம் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டித்து கொண்டிருக்கின்றனர்.
சிறுநீரக பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமையன்று (இன்று) உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிறுநீரக பாதிப்பை அறிவது, தவிர்ப்பது, சிகிச்சை முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்படும் சிறுநீரக பாதிப்பு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் காப்பாற்ற, குறைந்த கட்டணத்தில் "டயாலிசிஸ்' செய்யும் அரிய சேவையை ஆற்றி வருகின்றனர் சென்னையை சேர்ந்த "டாங்கர் பவுண்டேசன்' (tamilnadu kidney research foundation) அமைப்பினர். ""கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நான் மருத்துவராக பணியாற்றி வந்தேன். அந்த நாட்டில் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு "டயாலிசிஸ்' சிகிச்சையளிக்கும் பணியை அரசே செய்து வருகிறது.
""தமிழகம் வந்தபோது, சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் "டயாலிசிஸ்' செய்ய வசதியின்றி இறந்து வருவதை அறிந்து அதிர்ந்து போனேன். இவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவே, இந்த அமைப்பு,'' என்று "டாங்கர் பவுண்டேசன்' துவங்க அடிப்படையாய் இருந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார் டாக்டர் ஜார்ஜ் ஆப்ரகாம்.
கடந்த 1993ம் ஆண்டு சென்னையில் துவங்கிய இந்த அமைப்பு தற்போது, சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் விரிவடைந்துள்ளது. இந்த மூன்று மையங்களிலும் சேர்த்து மொத்தம் 125 நோயாளிகள் சலுகை கட்டணத்தில் "டயாலிசிஸ்' செய்து வருகின்றனர். இது தவிர, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஒரு இயந்திரத்தை நிறுவி அங்குள்ள நோயாளிகளுக்கு "டாயலிசிஸ்' செய்யப்பட்டு வருகிறது.
""சிறுநீரகங்கள் இயங்காமல் போனால்,ரத்தத்தில் கழிவுகள் அகற்றப்படாது. இந்த கழிவுகளை சுத்தம் செய்யா விட்டால் நாளைடைவில் நோயாளி இறந்து விடுவார். இதைத் தவிர்க்க ரத்தத்தில் உள்ள இந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியைத்தான் "டயாலிசிஸ்' என்று அழைக்கிறோம். இந்த இயந்திரம் ஒரு மாற்று சிறுநீரகம் போலவே செயல்படுகிறது,'' என்று விளக்கினார் ஆப்ரகாம்.
மரணத்தை தள்ளிப் போடும் இந்த சுத்திகரிப்பு முறையை தனியார் மருத்துவமனைகளில் செய்தால், மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டி வரும். அன்றாட உணவுக்கே வழியின்றி இருக்கும் ஏழைகளுக்கு சிறுநீரக பாதிப்பு வருமானால் அவர்களுக்கு இறப்பை தவிர வேறு "சாய்ஸ்' இல்லை. இதை போக்க வருமானம் குறைந்த ஏழைகளுக்கு குறைந்தபட்சமாக 400 ரூபாய் செலவில் "டயாலிசிஸ்' செய்யும் புனித காரியத்தை செய்து வருகின்றனர் "டாங்கர்' அமைப்பினர்.
டாக்டர் ஜார்ஜ் ஆப்ரகாம், டாக்டர் சுரேஷ் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் "டாங்கர்' தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்வேறு மருத்துவர்களும் இந்த மையத்தின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்து வருகின்றனர்.
""ஆர்ய வைத்யசாலையின் உதவியோடு, கோவையில் அடுத்த 3 மாதத்தில் எங்கள் மையத்தின் கிளையை துவங்கவுள்ளோம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிறுநீரக பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களை கவனிப்பதற்காக இவர்களுக்கு என்று சென்னையில் தனியாக ஒரு "டயாலிசிஸ்' மையத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம்'' என்று எதிர்கால திட்டங்களை தெரிவித்தார் ஜார்ஜ் ஆப்ரகாம்.
"டாங்கர்' அமைப்பின் செயலர் லதா குமாரசாமி கூறியதாவது: உலக அளவில் 30 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கே பெரும்பாலும் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு 90 சதவீதம் வரை ஏற்பட்ட பின்தான் பெரும்பாலும் பாதிப்பு வெளியே தெரிய வருகிறது. "டயாலிசிஸ்' செய்வதோடு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவி, மருந்துகள் வாங்கி தருதல் என 48 லட்ச ரூபாய் செலவில் உதவிகளை வழங்கியுள்ளோம். இதோடு, ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஊசியும் போட்டு வருகிறோம்.
இத்தனை பணிகளையும் செய்ய காரணமாய் பல்வேறு துறைகளை சார்ந்த பல நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கின்றனர். "டயாலிசிஸ்' செய்வதற்கு ஆகும் செலவை பல்வேறு நன்கொடையாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். முகம் தெரியாதவர்கள் உயிர்வாழ உதவும் அந்த நன்கொடையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறுநீரகம் என்பது...
*நம் உடலின் பின்பகுதியில் உள்ளது.
*நம் உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன.
*10 செ.மீ., நீளமும், 5 செ.மீ.,அகலமும் கொண்டது.
*ஒவ்வொன்றும் 150 கிராம் எடை கொண்டது.
*நச்சுப் பொருள்களை பிரித்தல், ரத்தக் கொதிப்பை சீர் செய்தல், எலும்புகளை உறுதி செய்தல், உடலில் நீர் நிலை சமப்படுத்துதல் உள்ளிட்டவை சிறுநீரகத்தின் பணிகள்.
சிறுநீரக கோளாறின் அறிகுறியும், காரணங்களும் :
"ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உடல்பருமன், புகை பிடித்தல், மது அருந்துதல், அடிக்கடி சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுதல்' போன்றவை சிறுநீரகக் கோளாறின் காரணங்களாகும். முகவீக்கம், சிறுநீர் குறைதல், கால்களில் வீக்கம், சிறுநீரில் ரத்தம் போதல், ரத்த சோகை, பசியின்மை, வாந்தி, உடல் அழர்ச்சி, தூக்கம் இன்மை, அரிப்பு உள்ளிட்டவை சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
creatinine எனும் ரத்தப் பரிசோதனை மூலமும், சிறுநீரக சோதனை மூலமும் இதை கண்டறியலாம். முழுமையாக பாதிப்படைந்து சிறுநீரகம் செயலிழக்கும் முன் கண்டறிந்தால் உரிய சிகிச்சை வழங்க முடியும். இந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் கோஷம் "உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்' என்பதாகும்.
-- தினமலர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)